கோவாவில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருக்கிறோம் - ப.சிதம்பரம்

கோவா மக்களின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2022-03-10 11:58 GMT
புதுடெல்லி,

40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில் பாஜக 20 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் கோவாவில் பாஜக ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

கோவா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது:-

கோவா மக்களின் தீர்ப்பை வரவேற்கிறோம். எங்கள் வேட்பாளர்கள் பல இடையூறுகளை மீறி துணிச்சலுடன் போராடினார்கள். கோவா மக்கள் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர், அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஒரு சில தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருக்கிறோம்.

பல்வேறு கட்சிகளுக்கு இடையே எங்களது வாக்குகள் பிரிந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட எங்கள் வாக்கு எண்ணிக்கை குறைவாக இருந்தது. 33% வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்