சர்வதேச விமான போக்குவரத்து 27-ந் தேதி தொடங்குகிறது
2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து 27-ந் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதியில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு மாதந்தோறும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
ஒப்பந்த அடிப்படையில், 35 நாடுகளுக்கு மட்டும் சர்வதேச சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து, இம்மாதம் 27-ந் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.