உ.பி.யில் யோகி ஆட்சி; கடவுள் கிருஷ்ணர் எனது கனவில் வந்து கூறினார்: பா.ஜ.க. எம்.பி.

கடவுள் கிருஷ்ணர் எனது கனவில் வந்து உத்தர பிரதேசத்தில் யோகி ஆட்சி அமைத்திடுவார் என கூறினார் என்று பா.ஜ.க. எம்.பி. கூறியுள்ளார்.

Update: 2022-03-08 16:43 GMT


புதுடெல்லி,


403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  வாக்கு எண்ணிக்கை 10ந்தேதி நடைபெறுகிறது.  உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் கட்சி பற்றிய கணிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன.  அதில், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், நாடாளுமன்ற ராஜ்ய சபை பா.ஜ.க. எம்.பி.யான ஹர்னத் சிங் யாதவ் இன்று கூறும்போது, கணிப்புகள் உண்மையே.  கடவுள் கிருஷ்ணர் எனது கனவில் வந்து உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைத்திடுவார் என கூறினார்.  யோகி ஆட்சி அமைந்து அவர் தனது பணியை நிறைவு செய்வார்.  கடவுள் கிருஷ்ணரின் விருப்பத்திற்கு சவால் விடவோ அல்லது மறுக்கவோ ஒருவராலும் முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, ஹர்னத் சிங் கூறும்போது, கடவுள் கிருஷ்ணர் எனது கனவில் வந்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மதுரா சட்டசபை தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று கூறினார்.  எனினும், அவர் கோரக்பூர் (நகர்) தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.

மேலும் செய்திகள்