பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் கைது
ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் 3 பேர் பெங்களூருவில் போதைப்பொருள் விற்றதற்காக கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
பெங்களூரு புலிகேசிநகர் பகுதியில் போதைப்பொருள் விற்ற 2 வாலிபர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த கிறிஸ்டியன் இகே சுக்வு, ஜான் ஒபினா என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 400 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோல ஆன்லைன் மூலம் போதைப்பொருட்கள் விற்ற தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நெல்சன் என்பவரை கே.ஜி.ஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேர் மீதும் புலிகேசிநகர், கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.