இமாச்சலப்பிரதேச மாணவர்கள் யாரும் கீவ்வில் இல்லை - முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர்

இமாச்சலப்பிரதேச மாணவர்கள் யாரும் கீவ்வில் இல்லை என்று அம்மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.

Update: 2022-03-02 15:25 GMT
போபால்,

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர்.  மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.  

தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாணவர்கள் யாரும் கீவ்வில் இல்லை என்று அம்மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார். 

இது குறித்து முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில்,

உக்ரைனில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களை விரைவில் அழைத்து வருவதற்கும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த எந்த மாணவர்களும் கீவ் நகரில் சிக்கித் தவிக்கவில்லை. உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக 4  மத்திய மந்திரிகள் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்