ஏர் இந்தியா சிஇஓ பதவியை ஏற்க மறுத்த இல்கர் ஐசி: காரணம் என்ன?
ஏர் இந்தியாவின் தலைமை பதவி வேண்டாம் என வேண்டாம் என இல்கர் ஐசி கூறியுள்ளார்.
மும்பை,
ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இலகர் அய்சி என்பவரை டாடா குழுமம் நியமனம் செய்தது. துருக்கியைச் சேர்ந்த இவர் அந்நாட்டின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், துருக்கி அதிபர் ஏர்டோகானின் முன்னாள் ஆலோசகரும் ஆவார்.
டாடா குழுமம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இலகர் அய்சியை நியமனம் செய்து அறிவித்தது. இவர் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சிஇஓ பொறுப்பு ஏற்க இருந்தார்.
ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் முக்கிய பொறுப்புகளில் இருப்பது பாதுகாப்பற்றது என்று நாடு தழுவி எதிர்ப்புகள் கிளம்பின.
இதற்கிடையே, ஆர்எஸ்எஸ் கீழ் இயங்கும் சுதேி ஜாக்ரன் மஞ்ச், அண்டை நாட்டவரை தலைமை பதவிக்கு நியமனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஏர் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தனக்கு வேண்டாம் என இல்கர் ஐசி நிராகரித்துள்ளார். இதையடுத்து, ஏர் இந்தியாவின் தலைமை பதவியில் யார் நியமிக்கப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.