ஆபரேசன் கங்கா: உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசு தகவல்
உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா ஒரு போதும் பின்வாங்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் போர் முனையில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேசன் கங்கா மூலம் மீட்க நான்கு மத்திய மந்திரிகள் கொண்ட குழு உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற எல்லைக்கு அருகில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரோடில் இந்தியக்குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது எனவும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.