மணிப்பூர் மாநில தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது..!
முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இம்பால்,
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதன்படி, முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.
கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். வாக்குப்பதிவை ஒட்டி, வாக்குப் பதிவு மையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்காள்ளப்பட்டன.
தொடர்ந்து, இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.