மும்பையில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை
மும்பையில் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
மும்பை,
நாட்டின் நிதி தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பையில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே மளமளவென சரிந்து வரும் கொரோனா பாதிப்பு மக்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. , கடந்த ஒருவாரமாக மும்பையில் தொற்று பாதிப்பு 200-க்கும் கீழ் உள்ளது.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் ஒரு நாள் பாதிப்பு 128- ஆக குறைந்துள்ளது. தொற்றில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 200- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. நடப்பு மாதத்தில் மட்டும் 6-வது முறையாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
மும்பையில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 56 ஆயிரத்து 207- ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,691- ஆக நீடிக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 35 ஆயிரத்து 626-ஆக குறைந்துள்ளது.