கர்நாடகத்தில் புதிதாக 628 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 628- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-25 14:31 GMT
பெங்களூரு, 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் இன்று 67 ஆயிரத்து 583 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 346 பேர் உள்ளனர். ஒரே நாளில் 1,349 பேர் குணம் அடைந்தனர். வைரஸ் தொற்றுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்தனர். 

இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கு கீழ் உள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.38 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.’

மேலும் செய்திகள்