ரஷியா போர் :பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார்! - உக்ரைன் தூதர் பேட்டி!

உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் பிரதமர் மோடி என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என உக்ரைன் தூதர் கூறி உள்ளார்.

Update: 2022-02-24 10:50 GMT
புதுடெல்லி,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார்.  உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.  தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய படைகளில் உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார் என  உக்ரைன் தூதர் பேட்டி அளித்து உள்ளார்.

உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் பிரதமர் மோடி என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார்  என உக்ரைன் தூதர் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியதாவது:-

 ரஷ்யாவுடன் இந்தியா சிறப்பான உறவைக் கொண்டுள்ளது, மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா  மிகவும் தீவிரமான பங்கை வகிக்க முடியும்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோரை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா தனது உலகளாவிய பங்கை முழுமையாக ஏற்க வேண்டும். மோடி ஜி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவர்.

"எத்தனை உலகத் தலைவர்கள்  சொல்வதை புதின் கேட்கக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், மோடி ஜியின் மீது  எனக்கு நம்பிக்கை உள்ளது. அவரது மதிப்பான  குரல் காரணமாக, புதின் குறைந்தபட்சம் அதைப் பற்றி யோசிப்பார். இந்தியரிடமிருந்து நாங்கள் மிகவும் சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம்.  என கூறினார்.

மேலும் செய்திகள்