பீகாரில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து
பீகாரில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
போபால்,
பீகார் மாநிலம் தானாபூரில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நோக்கி ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. மத்தியபிரதேச மாநிலம் பேடுல் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, அந்த ரெயிலின் ஒரு பொதுப்பெட்டியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது.
அந்த பெட்டியில் இருந்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.