நேரடி பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை..!
10, 12-ம் வகுப்புகளுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ, தேசிய திறந்நநிலை பள்ளி, மாநில கல்வி வாரியங்களின் 10, 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகளை, நேரடியாக நடத்த தடை விதிக்கக்கோரி குழந்தை நல ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா சகாய் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி வக்கீல் பிரசாந்த் பத்மநாபன் தலைமை, நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் முறையிட்டார்.
இதனை பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த பொதுநல மனுவை நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.