ஆந்திர மாநில மந்திரி கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்!
ஆந்திர பிரதேச மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி மேகபதி கவுதம் ரெட்டி இன்று காலமானார்.
ஐதராபாத்,
ஆந்திர பிரதேச மாநில தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி மேகபதி கவுதம் ரெட்டி இன்று இயற்கை எய்தினார்.அவருக்கு வயது 49.
முன்னதாக கவுதம் ரெட்டி நேற்று துபாயில் இருந்து இந்தியா வந்தார். இந்நிலையில் அவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த மந்திரி கவுதம் ரெட்டி, ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தின் ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினரானவர்.