மணிப்பூரில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு..!! முழு அடைப்புக்கு அழைப்பு

மணிப்பூரில் பிரதமர் மோடியின் வருகைக்கு கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Update: 2022-02-20 23:06 GMT
கோப்புப்படம்
இம்பால், 

மணிப்பூரில் வருகிற 28 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) மணிப்பூர் செல்கிறார். தலைநகர் இம்பாலில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடியின் இந்த பயணத்துக்கு அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அனைத்து கிளர்ச்சி குழுக்களின் கூட்டமைப்பான ஒருங்கிணைப்புக்குழு இந்த எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.

பிரதமரின் வருகையை புறக்கணிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள இந்த குழுவினர், நாளை அதிகாலை 1 மணி முதல் பிரதமர் மோடி மணிப்பூரில் இருந்து கிளம்பும்வரை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்தவும் அழைப்பு விடுத்து உள்ளனர். கிளர்ச்சியாளர்களின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்