பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை நேற்று டெல்லியில் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார்.

Update: 2022-02-19 21:49 GMT
புதுடெல்லி,

தேர்தல்களில் பல்வேறு கட்சிகளுக்காக பணியாற்றி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், ஒரு காலத்தில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமாருடன் நெருக்கமாக இருந்து வந்தார். அத்துடன் ஐக்கிய ஜனதாதளத்திலும் இணைந்தார்.

ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளித்த நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 2020-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இணைவதற்காக கட்சி தலைமையுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தார். ஆனால் இந்த இணைப்பு முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் நிதிஷ்குமாரை நேற்று டெல்லியில் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். இதன் மூலம் அவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற யூகங்கள் வலுத்துள்ளன.

மேலும் செய்திகள்