மராட்டியத்தில் 3 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு; பறவை காய்ச்சல் பரவலா?
மராட்டியத்தில் 3 ஆயிரம் பறவைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
புனே,
மராட்டியத்தின் தானே மாவட்டத்தின் ஷாபூர் நகரில் வெல்ஹோலி பகுதியில் பறவைகள் உயிரிழந்து கிடந்துள்ளன. இதுபற்றி தகவல் அறிந்து மாநில விலங்குகள் நல துறை சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது.
இதில், பறவைகளுக்கு இன்புளூயன்சா எனப்படும் வைரசால் ஏற்பட கூடிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கோழி பண்ணையில் இருந்த நூற்றுக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டன.
பறவை காய்ச்சலுக்கு மொத்தம் 3 ஆயிரம் பறவைகள் வரை உயிரிழந்து உள்ளன என கூறப்படுகிறது. எனினும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். இதனால் மராட்டியத்தில் பறவை காய்ச்சல் பரவ கூடிய சூழல் காணப்படுகிறது.