கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,757- பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,757- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-19 13:18 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,757- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 17,806- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 75,017-ஆக உள்ளது. கேரளாவில்  கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64,053- ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 10.84 சதவிகிதமாக குறைந்துள்ளது.  தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 62,301- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 1,462- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 750- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்