பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பஞ்சாபில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-02-18 15:54 GMT
அமிர்தசரஸ்,

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் (20-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாஜக, சிரோமணி அகாலி தளம் என பலமுனை போட்டி உள்ளது.  இதனால்,தேர்தல் களம் அனல் பறந்தது. 

தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன்  6 மணியுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பஞ்சாபில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்