பெங்களூருவில் 200 க்கும் மேற்பட்ட சிக்னல் பேட்டரிகளை திருடிய தம்பதி..!

பெங்களுருவில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிய தம்பதி கைது செய்யயப்பட்டுள்ளனர்.

Update: 2022-02-18 10:35 GMT

பெங்களுருவில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிய தம்பதி  கைது செய்யயப்பட்டுள்ளனர்.பெங்களூரு முழுவதும் ,சில மாதங்களாக போக்குவரத்து சிக்னல் பேட்டரி திருட்டுகள் அதிகரித்து வந்தது , இந்த திருட்டில் ஈடுபடுபவர்களை  பிடிக்க தொடர்ந்து  போலீசார்  முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர் 

இந்நிலையில் இது தொடர்பாக கணவன்-மனைவி  ஆகியோர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 2021 மற்றும் ஜனவரி 2022 க்கு இடையில் நகரம் முழுவதும் உள்ள 68 போக்குவரத்து சந்திப்புகளில் இருந்து 230 க்கும் மேற்பட்ட பேட்டரிகளை  திருடியுள்ளனர் ,

பெங்களூரு , சிக்கபனாவரத்தைச் சேர்ந்த எஸ் சிக்கந்தர் 30, மற்றும் அவரது மனைவி நஸ்மா சிக்கந்தர் 29, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 230க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடி, கிலோ 100 ரூபாய்க்கு விற்றதாக ,என  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்