உத்தரகாண்ட் : ரோடு சீரமைப்பு செய்து தரவில்லை: தேர்தலை புறக்கணித்த 2 கிராம மக்கள்...!

கேதார்நாத் தொகுதிக்கு உட்பட்ட ஜக்கி பக்வான் மற்றும் சிலாண்ட் ஆகிய 2 கிராம மக்கள் மட்டும் சாலையை சீரமைத்து தராததால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

Update: 2022-02-14 18:49 GMT
டேராடூன், 

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

70 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

இதற்கிடையே கேதார்நாத் தொகுதிக்கு உட்பட்ட ஜக்கி பக்வான் மற்றும் சிலாண்ட் ஆகிய 2 கிராம மக்கள் மட்டும் சாலையை சீரமைத்து தராததால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர். இந்த 2 கிராமங்களிலும் மொத்தம் 601 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்