இந்தோ-சீன எல்லையில் அமைந்த இந்தியாவின் கடைசி தேநீர் கடை

இந்தோ-சீன எல்லையில் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்தியாவின் கடைசி தேநீர் கடை கவனம் ஈர்த்து உள்ளது.

Update: 2022-02-12 08:44 GMT

சமோலி,


உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் இந்தோ-சீன எல்லையையொட்டிய இந்திய பகுதியில் தேநீர் கடை ஒன்று உள்ளது.  3,118 மீட்டர் உயரத்தில், இமயமலையை ஒட்டிய இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்தியாவின் கடைசி தேநீர் கடை என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சந்தர் சிங் பத்வால் என்பவரால் தொடங்கப்பட்டு, இந்தியாவின் கடைசி தேநீர் கடை என்றே பெயரிடப்பட்டு நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது.  இந்த கடையானது சீன எல்லையில் இருந்து சில மீட்டர்கள் தொலைவிலேயே அமைந்துள்ளது.

இந்த தேநீர் கடையில் தேநீரும், மேகியும் (நூடுல்ஸ்) பிரபலம் வாய்ந்தவை.  இதனை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவும் தனது டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.  அதில், இந்தியாவின் சிறந்த செல்பி எடுப்பதற்கான இடங்களில் இது ஒன்று, இல்லையா? ஈடு இணையற்ற வாசகம் இந்தியாவின் கடைசி தேநீர் கடை.  இதன் ஒரு கோப்பை தேநீர் விலைமதிப்பற்றது என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்