பெண்களுக்கு எதிரான குற்றத்தில் தான் உ.பி. முதல் இடத்தில் உள்ளது - பாஜக அரசு மீது அகிலேஷ் விமர்சனம்

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் தான் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளதாக பாஜக அரசு மீது அகிலேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-02-12 00:24 GMT
லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபை 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றுள்ளது. இதையடுத்து, 2-ம் கட்ட தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டம் சுயர் பகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, ஆளும் பாஜக அரசு மீது கடுமையான விவ்மர்சனங்களை முன்வைத்தார். 

அகிலேஷ் யாதவ் பேசுகையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின் படி, பெண்களுக்கு எதிராக நடைபெற்றும் குற்றங்கள், போலீஸ் காவலில் மரணங்கள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் பெறுதல், போலி என்கவுண்டர்கள் நடைபெறும் மாநிலங்களில் தற்போது உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்