அரியானாவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!
அரியானாவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரியில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணமாக அரியானாவில் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில் அரியானாவில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.