ஹூண்டாய் நிறுவனத்தின் பதிவை ரத்து செய்ய வேண்டும்! காவல்துறையிடம் புகார்

ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.

Update: 2022-02-08 08:50 GMT
புதுடெல்லி,

பிப்ரவரி 5 ஆம் தேதி பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என கடைபிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.

கடந்த 5 ஆம் தேதி பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. 

அதில், “காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், “ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சந்தைக்கு உண்மையாக இருக்கிறது. 
ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம். பொறுப்பற்ற  முறையில் வெளியான கருத்துக்களை  நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை என   சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார். 

இப்போது டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை மந்திரியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் ஹூண்டாய், கியா, கேஎப்சி, பிஸ்ஸா ஹட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக டெல்லி காவல்துறையிடம்  புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஹூண்டாய், கியா, கேஎப்சி, பிஸ்ஸா ஹட் ஆகிய நிறுவனங்களின் பதிவை நீக்க வேண்டும்.

பாகிஸ்தானில் தங்கள் வியாபாரம் லாபம் அடைவதற்காக, இந்த நிறுவனங்கள் இந்தியாவின் இறையாண்மையை தாழ்த்தி பேசி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. இது சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது. இந்தியாவுக்கு எதிராக போர் உண்டாகும் அபாயம் உள்ளது” என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்