ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி..!! சீரம் நிறுவனத்துக்கு இந்தியா அனுமதி
ஓமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
ஒமைக்ரான் வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகிறது. அதனால், அதற்கு எதிரான தடுப்பூசியை உற்பத்தி செய்ய அனுமதி கோரி, மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விண்ணப்பித்தது.
இந்தநிலையில், ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதற்கு சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி அனுமதி அளித்துள்ளார். பரிசோதனை செய்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம், ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது.