தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணம்: தேசிய மருத்துவ கமிஷன் முக்கிய முடிவு

தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் வசூலிக்கப்பட வேண்டிய கல்வி கட்டணம் தொடர்பாக தேசிய மருத்துவ கமிஷன் முக்கிய முடிவு ஒன்றை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக குறிப்பாணை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2022-02-05 21:51 GMT
இதில் முக்கியமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் உள்ள 50 சதவீத இடங்களின் கட்டணம், அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பலன் முதலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கிடைக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம், மொத்தம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாக அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருந்தால், மீதமுள்ள மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தை செலுத்த வேண்டியதன் பலனைப் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்விக்கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை நிர்ணயிப்பதில் பின்பற்றப்படும் கொள்கைகளின்படி, எந்தவொரு நிறுவனமும் எந்த வடிவத்திலும் அல்லது முறையிலும் மறைமுக கட்டணத்தை வசூலிக்கக் கூடாது எனவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்