10 ஆயிரம் அடி உயரத்தில் 104 அடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங்கில் 10 ஆயிரம் அடி உயரத்தில் 104 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Update: 2022-02-04 14:58 GMT

இட்டாநகர்,            

அருணாச்சலப் பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு, சீனாவின் எல்லையில் அமைந்துள்ள புத்த யாத்ரீக நகரமான தவாங்கில் உள்ள நங்பா நாட்மே (புத்த பூங்கா) என்ற இடத்தில் 104 அடி உயர தேசியக் கொடியை ஏற்றினார். 

இது 10,000 அடி உயரத்தில் இருக்கும் இரண்டாவது மிக உயரமான தேசியக் கொடியாகும். இதையடுத்து முதல்-மந்திரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசியக் கொடி, மாநிலத்தின் அனைத்து தேசபக்தியுள்ள மக்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த சாதனைக்காக ராணுவம், சஷாஸ்த்ரா சீமா பால், இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை, தவாங் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் எம்எல்ஏ செரிங் தாஷி ஆகியோருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் எல்லை அருகே சீனாவின் அத்துமீறல்களுக்கு மத்தியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்