சூட்கேசில் காதலியை மறைத்து விடுதிக்கு எடுத்து சென்ற மாணவர் சிக்கினார் -வீடியோ
விடுதி அறைக்கு தன் காதலியை சூட்கேசில் மறைத்து எடுத்து சென்ற கல்லூரி மாணவர் வீடியோ வைரலாகி உள்ளது.
மங்களூரு:
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மணிப்பால் பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவர் மிகப்பெரிய சூட்கேசுடன் விடுதிக்குள் நுழைந்து உள்ளார். விடுதி பாதுகாவலர்கள் கேட் அருகே சந்தேகமடைந்து அதை சோதனையிட முயன்றார். ஆனால் அந்த மாணவர் பேக்கை தூக்கி கொண்டு ஓடி உள்ளார்.
பாதுகாவலர் அந்த பேக்கை பறித்து சோதனை செய்து உள்ளார். அப்போது பேக்கிற்குள் இருந்து ஒரு அழகிய பெண் வந்து உள்ளர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர். மாணவரிடம் விசாரித்து உள்ளார். மாணவர் தன் காதலி என கூறி உள்ளார்.
இது குறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது இது சம்பந்தமாக மணிப்பால் போலீசாரிடம் விசாரித்த போது இது சம்பந்தமாக புகார் எதுவும் வரவில்லை என்று கூறினார் இருப்பினும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
விடுதி அறைக்கு தன் காதலியை சூட்கேசில் மறைத்து எடுத்து சென்ற கல்லூரி மாணவர்#viralvideo#trending#Dailythanthi#dt#DTNEWS#Bangalorenewspic.twitter.com/qkAtbtWuIe
— DailyThanthi (@dinathanthi) February 3, 2022