2-வது மனைவியுடன் முதலிரவு; நகை,பணத்துடன் ஓட்டம் ; முதல் மனைவி வீட்டில் பிடிபட்ட மாப்பிள்ளை

ஆலப்புழா அருகே 2-வது மனைவியிடம் முதலிரவை முடித்த மாப்பிள்ளை முதல் மனைவி விட்டில் நகை, பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்

Update: 2022-02-02 07:43 GMT
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் ஆலப்புழா காயங்குளம் பகுதியை சேர்நத அஸ்கருதீன் ரஷீத்துக்கும் (30) அடூர் அருகே உள்ள பழக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 30-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. பின்னர் இருவருக்கும் அன்று இரவு முதலிரவு நடந்துள்ளது. 

நள்ளிரவு 3 மணி அளவில் அஸ்கருதீன் தனது நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கி ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.  அவருக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் அதனை கொடுப்பதற்காக தான் செல்ல வேண்டும் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் காலை வெகு நேரமாகியும் அவரை காணவில்லை. தொடர்ந்து பெண் வீட்டார் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  

அதனை அடுத்து சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் நடத்திய சோதனையில், அஸ்கருதீன் தனது மனைவியின் 25 பவுன் நகை  மற்றும் அவருக்கு வரதட்சணையாக கிடைத்த இரண்டு லட்ச ரொக்கம் ஆகியவற்றுடன் தலைமறைவானது  தெரியவந்தது.

இது குறித்து அடூர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். 

அஸ்கருதீன் ரஷீத்துக்கும் ஆலப்புழாவில் சேப்பாடு என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதன் பேரில் சேப்பாடு விரைந்த போலீசார் அங்கு தலைமறைவாக இருந்த அஸ்கருதீன் ரஷீதை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்