கட்சி தலைமை மீது அதிருப்தி இல்லை - விலகல் வதந்திக்கு குலாம்நபி ஆசாத் முற்றுப்புள்ளி

குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சியை விட்டு விலகுவார் என்றும் பேசப்பட்டு வந்தது.

Update: 2021-12-26 20:12 GMT
ஜம்மு, 

காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சியை விட்டு விலகுவார் என்றும் பேசப்பட்டு வந்தது. காஷ்மீரில் கட்சி பதவிகளில் இருந்து விலகிய மூத்த தலைவர்களுடன் அவர் நெருக்கமாக இருப்பதும் இதற்கு ஆதாரமாக கூறப்பட்டது. இந்தநிலையில், ஜம்முவில் நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் கூறியதாவது:-

நான் காங்கிரஸ்காரன். இல்லை என்று யார் சொன்னது? 24 காரட் காங்கிரஸ்காரன். கட்சி மீது எனக்கு அதிருப்தி இல்லை. கட்சியை பிளந்தவர்களுக்கு பிளவு மட்டுமே தெரியும். நான் ஒற்றுமைப்படுத்த நினைப்பவன். கட்சியை ஒன்றுபடுத்துவதற்குத்தான் சீர்திருத்தம் வேண்டும் என்று கேட்கிறேன். சீர்திருத்தம் என்பது ஒவ்வொரு கட்சிக்கும், நாட்டுக்கும் அவசியம். சீர்திருத்தங்களால்தான் பழங்கால கொடிய வழக்கங்கள் இன்று ஒழிந்துள்ளன. காஷ்மீரில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா என்று கேட்டால், மக்கள் கையில்தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்