டெல்லியில் உயரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 290 பேருக்கு தொற்று..!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-26 14:11 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  290 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 14,43,352 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோன தொற்று பாதிப்பு டெல்லியில் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,105 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 1,103 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்