மத்தியபிரதேசத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிப்பு
மத்தியபிரதேசத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அங்கு ஒமைக்ரான் வழக்கு பதிவாகாமல் இருந்த போது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், சமீப காலங்களில் மொத்தம் 3,000 வெளிநாட்டு பயணிகள் இந்தூருக்கு திரும்பி தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1,000 பேரில், 26 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் இளைஞர்களே தொற்றிற்கு ஆளாகியுள்ளனர்.
புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட 8 நோயாளிகளில், ஆறு பேர் சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இருவர் அறிகுறியற்றவர்களாக இருந்தபோதிலும் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.