சமூக வலைத்தளங்கள் மூலம் கேரள முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல்
கடந்த 2 தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் மூலம் கேரள முதல்- மந்திரி பினராய்விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பாலக்காடு,
பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 44). இவர் பா.ஜனதா தொண்டர் ஜெயப்பிரகாஷ் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் மூலம் கேரள முதல்- மந்திரி பினராய்விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ஆபாசமாகவும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள், ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி பாலக்காடு போலீசார் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதை அறிந்த ஜெயபிரகாஷ் தலைமறைவாகினார். இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.