இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 6,650 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒரு பக்கம் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுக்கத்தொடங்கி உள்ளது. இந்த வேளையில் கொரோனா தினசரி பாதிப்பும் தொடர்ந்து ஏறியும் இறங்கியும் வருகிறது.
https://t.co/qHHPuKcnSk#COVID19Pandemic#CoronaVirusUpdates#IndiaFightsCoronapic.twitter.com/blLek4bWnH
— DailyThanthi (@dinathanthi) December 24, 2021
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 6,650 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 7,051 பெர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,08,926 லிருந்து 3,42,15,977 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 374 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,78,759 லிருந்து 4,79,133 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 77,516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 358 பேரில் 114 பேர் குணமடைந்து விட்டனர்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.