கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான்: மொத்த பாதிப்பு 29 ஆக உயர்வு.!
கேரளத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவணந்தபுரம்,
இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருப்பதாவதது,
கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் பிரிட்டன், நைஜீரியா, மற்றும் அல்பேனியாவிலிருந்து வந்தவர்கள். கோழிக்கோட்டில், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவர் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து வந்துள்ளார்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் கடந்த 12-ம் தேதி முதன்முறையாக பிரிட்டனிலிருந்து திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.