திருப்பதி கோயிலில் ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் துவக்கம்

திருப்பதி கோயிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் துவங்க உள்ளது.

Update: 2021-12-23 06:49 GMT
கோப்புப்படம்
திருமலை,

திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் நேரில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் (24-12-2021) துவங்க உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட் வீதம்  6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் 24ம் தேதி காலை 9 மணி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

மேலும் ஜனவரி மாதத்திற்கான சர்வதர்ஷன் டோக்கன்கள் 5 ஆயிரம் ஆப்லைனிலும், மேலும் 5 ஆயிரம் ஆன்லைனிலும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த டோக்கன்கள் 25ம் தேதி காலை 9 மணி முதல் ஆன்லைனில் கிடைக்கும். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் வீதம் 55 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்