இந்தியாவில் அதிகரிக்கும் “ஒமைக்ரான்” - பாதிப்பு எண்ணிக்கை 236 ஆக உயர்வு..!

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-12-23 04:13 GMT
புதுடெல்லி, 

தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒமைக்ரான் தொற்று பரவத்தொடங்கியதுமே ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. 

கொரோனா உறுதியானால் ஒமைக்ரான் பாதிப்பா என கண்டறிய மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்காக மாதிரிகள், மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இருப்பினும் இந்தியாவில் கடந்த 2-ந் தேதி இந்த வைரஸ் நுழைந்தது. அன்று 2 பேருக்கு கர்நாடக மாநிலத்தில் இந்த தொற்று பதிவானது. ஆனால் தற்போது இது நாட்டின் 15 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பரவி இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 236 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதன்படி மராட்டிய மாநிலம் - 65, டெல்லி - 64, தெலங்கானா - 24,  ராஜஸ்தான் - 21, கர்நாடகா - 19, கேரளா - 15, குஜராத் - 14, ஜம்மு-காஷ்மீர் - 3, ஒடிசா -2, உத்தரப்பிரதேசம் - 2, ஆந்திரா - 2, சண்டிகர் - 1, லடாக் - 1, மேற்கு வங்காளம் - 1, உத்தரகாண்ட் - 1,
தமிழ்நாடு - 1
ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 65 பேரில் இதுவரை 35 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 64 பேரில் இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகள்