மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று 600 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

Update: 2021-12-21 04:52 GMT
மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு உச்சமடைய தொடங்கியது.  இதன்படி, காலை 9.30 மணியளவில் 665.03 புள்ளிகள் உயர்ந்து (1.19 சதவீதம்) 56,487.04 புள்ளிகளாக உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உலோகம், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பிற துறைகள் லாபமடைந்து காணப்பட்டன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு வர்த்தகம் தொடங்கியதும் இன்று காலை 9.30 மணியளவில் 193.00 புள்ளிகள் உயர்ந்து (1.16 சதவீதம்) 16,807.20 புள்ளிகளாக உள்ளது.  நேற்று ஒரே நாளில் 1,100 புள்ளிகள் சென்செக்ஸ் குறியீடு சரிந்த நிலையில் இன்று உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்