ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
புதுடெல்லி,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலின் போது ஆசிய பசிபிக் பகுதியின் நிலை குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
எனது நண்பரான ஜனாதிபதி புதினின் சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது எங்களின் கலந்துரையாடல்களைப் பின்தொடர்வதற்காக அவருடன் தொலைபேசியில் பேசினேன். உரங்கள் வழங்குவது உட்பட இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழி குறித்து நாங்கள் ஒப்புக்கொண்டோம். சமீபத்திய சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்று தெரிவித்துள்ளார்.