குஜராத்தில் தான்சானியா நாட்டு மாணவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

குஜராத்தில் தான்சானியாவில் இருந்து படிக்க வந்த மாணவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-12-19 15:52 GMT

ராஜ்கோட்,

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள பல்கலை கழகத்தில் படித்து வரும் தான்சானியா நாட்டை சேர்ந்த 23 வயது மாணவர் ஒருவருக்கு கொரோனாவுக்கான அறிகுறி தென்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, அவருக்கு நடந்த பரிசோதனையில், ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  ராஜ்கோட் மாவட்டத்தில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு இதுவாகும் என்று கலெக்டர் அருண் மகேஷ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்