சபரிமலையில் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய அனுமதி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கி உள்ளது.
சபரிமலை,
கொரோனா பரவல் குறைந்ததால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கி உள்ளது.
எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்கு செல்லும் 38 கி.மீ தொலைவு உள்ள பெருவழிபாதையும் நாளை முதல் திறக்கப்படுவதாகவும் சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை தினமும் 45,000-ல் இருந்து 60,000 ஆக அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.