வடமேற்கு இந்தியாவில் 3 நாட்களுக்கு கடுங்குளிர் நிலவும்

வடமேற்கு இந்தியாவில் 3 நாட்களுக்கு கடுங்குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-12-19 12:32 GMT

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே. ஜெனாமணி கூறும்போது, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் வடக்கு மற்றும் உத்தர பிரதேசம் மேற்கு மற்றும் மத்திய பிரதேசம் வடக்கு உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வருகிற 21ந்தேதி வரை கடுங்குளிர் நிலவும்.

டெல்லியின் லோதி சாலை பகுதியில் மிக குறைந்த அளவாக 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்