கங்கை விரைவுப்பாதை : பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
கங்கை விரைவுப்பாதைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
லக்னோ
உத்தரபிரதேசம் ஷாஜஹான் பூரில் 594 கிலோ மீட்டர் நீளமுள்ள கங்கை விரைவுப்பாதைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை 36,200 கோடி செலவில் கங்கை விரைவுப்பாதை அமைக்கப்படவுள்ளது இந்த விரைவுச்சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசரமாக பறப்பதற்கும், தரை இறங்கும் வகையில் சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் விமான ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
உத்தர பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கின்ற மீரட் முதல் பிரயாக் வரையிலான விரைவுப்பதை இம்மாநிலத்தின் 12 மாவட்டங்கள் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது