வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்க தலைவர் கட்சி தொடங்குகிறார்
விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான குர்னம் சிங் சவுதானி, நாளை சண்டிகாரில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராய்ப்பூர்
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக விவசாய சங்கங்கள் ஒராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதையடுத்து, விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை கடந்த டிசம்பர் 9-ம் தேதி முடித்துக்கொண்டன.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான குர்னம் சிங் சதூனி புதிய அரசியல் கட்சி ஒன்றை நாளை சண்டிகரில் தொடங்க உள்ளார். இவர், மத்திய அரசிடம் வார்த்தை நடத்திய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பில் இடம்பெற்றிருந்த ஐந்து உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.