காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை; பிணை கைதிகளாக இருந்த 2 சிறுமிகள் மீட்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு பிணை கைதிகளாக இருந்த 2 சிறுமிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-12-16 16:40 GMT

ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பாலா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் 2 சிறுமிகளை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டை நடத்தி பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.  இதன்பின்னர் பிணை கைதிகளாக இருந்த 2 சிறுமிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

அந்த 2 பயங்கரவாதிகளும், குல்காம் பகுதியை சேர்ந்த ஆமிர் பஷீர் தார் மற்றும் அடில் யூசுப் ஆகியோர் என தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்