லஞ்ச வழக்கு: கைது செய்யப்பட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் ரூ.2.19 கோடி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் ரூ.2.19 கோடியை சி.பி.ஐ. பறிமுதல் செய்தது.

Update: 2021-12-15 23:02 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

வடகிழக்கு முன்னணி ரெயில்வேயின் தலைமை எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் உபத்யாய் மற்றும் துணை என்ஜினீயர் ரஞ்சித் குமார் போரா ஆகியோர் ரெயில்வே பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் நேற்று முன்தினம் ரூ.15 லட்சத்தை லஞ்சமாக பெற்ற போது ரஞ்சித் குமார் போராவை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக உபத்யாயும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர்களது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. இதில் ரூ.2.19 கோடி கைப்பற்றப்பட்டது.

இதில் தலைமை என்ஜினீயர் உபத்யாய்க்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.2.13 கோடியும், 3 அடுக்குமாடி வீடுகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதைப்போல போராவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.6 லட்சமும், 6 அடுக்குமாடி வீடுகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்