ஜம்மு காஷ்மீருக்கு தக்க நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் : மத்திய அரசு தகவல்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் தனியுரிமையை சார்ந்தது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் தனியுரிமையை சார்ந்தது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இணை மந்திரி நித்யானந்தா ராய் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் தனியுரிமையை சார்ந்தது. ஜம்மு காஷ்மீரில் இதுவரை 7 பிளாட்கள், வெளி மாநிலத்தவர்களால் வாங்கப்பட்டுள்ளது. 7 பிளாட்டுகளும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ளன” என்றார். ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.