2 நாள் அரசு முறைப்பயணம்: வங்காளதேசம் புறப்பட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்....

2 நாள் அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வங்காளதேசம் புறப்பட்டார்.

Update: 2021-12-15 03:51 GMT
புதுடெல்லி,

பாகிஸ்தானுடன் வங்காள தேசம் நடத்திய போரின் 50-வது வெற்றி தினம், நாடு உதயமான 50-வது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் நாளை (16.12.2021) நாளை மறுநாள்  (17.12.2021) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வங்காளதேசம் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் அரசு முறைப்பயணமாக வங்காளதேசம் இன்று புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வங்காளதேசம் புறப்பட்டார். அந்நாட்டின் 50-வது போர் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகவும் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார்.

வங்காளதேசத்தின் விடுதலைப் போர் 1971-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நாளை வங்காளதேசம் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக வங்காளதேசத்திற்கு பயணம் செய்கிறார்.

மேலும் செய்திகள்