கங்கை நதியை தூய்மைபடுத்துவதில் மோடி தோல்வி - நவாப் மாலிக்

கங்கை நதியை தூய்மைபடுத்துவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்துவிட்டார் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2021-12-13 14:24 GMT
மும்பை,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தற்போது, கங்கை நதிக்கரையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், கங்கை நதியை தூய்மைபடுத்துவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்துவிட்டார் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக நவாப் மாலிக் கூறுகையில், தற்போது ஏழரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் கங்கை நதியை தூய்மை செய்யும் திட்டம் என்ன ஆனது என்பது குறித்து மோடி அரசால் பதில் அளிக்கமுடியவில்லை. கங்கா தேவி தன்னை அழைத்ததாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், கங்கை நதியை தூய்மைபடுத்துவதில் மோடி தோல்வியடைந்துவிட்டார். வாரணாசி பிரதமர் மோடியின் மக்களவை தொகுதி. இங்கு உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் குறைந்தது 4 சட்டசபை தொகுதிகளில் பாஜக தோல்வியடையும் என நாங்கள் நினைக்கிறோம்’ என்றார்.

மேலும் செய்திகள்